தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 13.500 காலிப்பணியிடங்கள் – நியமனம் எப்போது?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக இருக்கும் சுமார் 13.500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
TNSTC JOBS 2021
காலி பணியிடங்கள்
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தொற்றுக்கு மத்தியில் தற்போது அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளன. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தானது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது.
அந்த வகையில் போக்குவரத்து கழகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது குறித்து எப்போது அறிவிப்புகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது ஒவ்வொரு அரசுப் பேருந்துக்கும் ஆறு பேர் என்ற கணக்கில் மொத்தம் 1.28 லட்சம் பேர் போக்குவரத்து கழகங்களில் பணியாற்ற வேண்டும். ஆனால், இன்றைய நிலவரத்தில் ஒரு பேருந்தில் 5க்கும் குறைவான ஊழியர்கள் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.
TNSTC JOBS
அதிலும் குறிப்பாக ஓட்டுனர், நடத்துனர் ஆகிய முக்கிய பணியிடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல பேருந்துகள் இயக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6000 பேர் வரை ஓய்வு பெற இருக்கும் நிலையில் ஏற்கனவே பலர் விடுப்பில் இருக்கின்றனர். இந்த சூழலை சமாளிப்பதற்கு அரசுப் போக்குவரத்து கழகங்களில் 4000 காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தமிழக அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாக மாநில நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கடந்த சட்டப்பேரவை நிதி அறிக்கையின் போது தெரிவித்திருந்தார். தவிர ஒரு அரசுப் பேருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பயணிப்பதற்கு அரசுக்கு ரூ.59.15 செலவாகிறது எனவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.