தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்
ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலாளர் வேலை(புகைப்படங்கள்- Samayam Tamil) தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தகுதிப் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்ப ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கிராம ஊராட்சி செயலர் வேலை 2025 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், எழுத்தர், காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணியிடங்கள் நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது கிராம ஊராட்சி...
