இந்திய விமானப்படையில் 174 காலியிடங்கள் – 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய விமானப்படையில் (IAF) இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Group C Civilian பதவிகளுக்கு என மொத்தமாக 174 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- அவற்றுடன் பணியில் 1 வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- குறைந்தபட்சம் ரூ.29,300/- முதல் அதிகபட்சம் ரூ.39,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் எழுத்துத் தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தோர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 03.10.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.