முன்னதாக கிரெடிட் கார்டு பற்றிய நன்மைகள் பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் கிரெடிட் கார்டின் பயன்பாடு அந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்பொழுது கிரெடிட் கார்டை பலரும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். கிரெடிட் கார்டுகளை கொண்டு மக்கள் அவசர நேரத்தில் பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால், அதனை வட்டியுடன் திரும்ப செலுத்த குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கபட்டிருக்கும். இந்த காலஅவகாசத்திற்குள் அதனை செலுத்த வில்லை என்றால் அதற்கு மேன்மேலும் வட்டி விதிக்கப்படும்.
இந்நிலையில், இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளது. இதனை பற்றி முழுமையாக தெரியாதவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டாம். மேலும் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி விதிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, கிரெடிட் கார்டுகளை நாம் அன்றாடம் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதாகும். அதாவது நமது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அவசர தேவைக்காக பணம் எடுக்கும்போது ‛ப்ராசசிங்’ கட்டணமாக குறிப்பிட்ட தொகை எடுக்கப்படுகிறது. இதனால், மக்கள் முடிந்த வரை இதுபோன்ற பயன்பாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.