கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் நகரில் கொரோனா என்ற கொடிய வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பல உயிர்களை பலிவாங்கியது. இந்த கொடிய வைரஸ் நோயினை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இறுதியில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தனர். இந்த தடுப்பூசி செலுத்திய பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்பொழுது அமெரிக்கா முழுவதும் சைலாசின் (xylazine) அல்லது ஜாம்பி எனப்படும் போதை மருந்தினை மக்கள் உட்கொள்வதன் மூலம் மக்கள் வித்தியாசமாக நடந்து கொள்கின்றனர். இந்த போதை பொருளை உட்கொள்வதன் மூலம் சுவாச மண்டல மற்றும் இதய துடிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், சருமத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவதுடன் மூச்சு திணறல் ஏற்பட்டு இறக்கவும் நேரிடும்.
சைலாசின் பவுடரை உட்கொண்டு பாதிக்கபட்ட நபருக்கு மாற்றுமருந்தே கிடையாது எனவும் அறிவியல் ஆராய்ச்சியாளராகள் கூறுகிறார்கள். இந்த ஜாம்பி வைரஸ் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.