ரயில்வேயில் 3366 காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு, கல்வி தகுதி & விண்ணப்ப பதிவு !
இந்திய ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.
- வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ECR, Railway |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 3366 |
விண்ணப்ப தேதி | 04.10.2021 – 03.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ரயில்வே காலிப்பணியிடங்கள் 2021:
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 3366 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பகுதி வாரியாக காலியிடங்கள்:
- Howrah Division – 659 பணியிடங்கள்
- Sealdah Division – 1123 பணியிடங்கள்
- Asansol Division – 412 பணியிடங்கள்
- Malda Division – 100 பணியிடங்கள்
- Kanchrapara Workshop -190 பணியிடங்கள்
- Liluah Workshop – 204 பணியிடங்கள்
- Jamalpur Workshop – 678 பணியிடங்கள்
Apprentice வயது வரம்பு :
விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய ரயில்வே கல்வித்தகுதி :
- 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI பாடங்களில் தேர்ச்சி அல்லது NCVT/ SCVT சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கிழக்கு மத்திய ரயில்வே தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI மதிப்பெண்களின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ECR விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- SC/ ST/ PWBD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையவர்கள் 04.10.2021 அன்று முதல் 03.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.