தமிழகமே பரப்பரப்பாக பேசப்படும் இரண்டு விஷயம் என்றால் அது தக்காளி விலை மற்றும் மகளிருக்கு ரூ.1000 வழக்கும் திட்டமாகும். அந்த அளவிற்கு மக்களிடையே அதிக வரவேற்பை மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற்றிருக்கிறது. இந்த திட்டம் நிதி நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று அமல்படுத்த உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், மகளிர்’ உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணபிப்பதற்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் முதற்கட்டமாக கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பல லட்சகணக்கான பெண்கள் இந்த திட்டத்திற்காக வின்னப்பபதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்பொழுது இரண்டாம் கட்டமாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் இன்று முதல் 4 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்ய உள்ளனர். விண்ணப்பம் விநியோகம் செய்யும்பொழுது வீட்டில் ஆள் இல்லாதவர்களின் விவரங்களையும் தனியாக குறித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 500 குடும்பங்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.