50% மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

50% மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

திருப்பூர் மாவட்டத்தில், 2024-25ம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50% மானியம் (ரூ.1,56,875/-)வழங்கும் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விவரங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு. உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1,56,875/- மாநில அரசால் வழங்கப்படும். திட்டத்தின் மீதமுள்ள 50% பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை இலவசமாக வழங்கப்படும். பயனாளிகளிடம் கோழி பண்ணையிலிருந்து கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள். ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2022-23 மற்றும் 2023- 24ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளோ அவர்களின் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக்கூடாது.

கட்டுமானப்பணிகள். தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல் 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23, 2023- 24ம்ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும்.

மேற்படி திட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள கால்நடை மருந்தக. கால்நடை உதவி மருத்துவரை அணுக வேண்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *