தமிழக மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு! படித்து பாருங்க – TN Magalir Urimai Thogai Re Apply 2024
TN Magalir Urimai Thogai Re Apply 2024
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் மூலம் 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 15ம் தேதி சரியாக வங்கி கணக்கில் ரூ.1000/- வரவு வைக்கப்பட்டு விடும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்:
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 1.63 கோடி பெண்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை மாதம்தோறும் செலுத்தப்படும்.
மறு விண்ணப்பம்:
மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்களுக்கு மீண்டும் மறு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் சேர்க்கை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இப்பணிகள் மீண்டும் துவங்கி உள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி ஜூன் மாதம் 2வது வாரம் வரை அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், அதன் பின்னர் தகுதியானவர்கள் பெயர் பரிசீலனை அடிப்படையில் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிவைடய சில காலம் தேவைப்படும் என்பதால், புதிதாக இணைவோருக்கு ஜூலை மாதம் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திட்டத்தில் பயன் பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு சரியாக வரவு வைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.