ரேஷன் அட்டை பெற புதிய வழிமுறைகள் வெளியீடு! என்னென்ன ஆவணங்கள் தேவை விண்ணப்பிக்க

ரேஷன் அட்டை பெற புதிய வழிமுறைகள் வெளியீடு! என்னென்ன ஆவணங்கள் தேவை விண்ணப்பிக்க

New Ration Card Apply: தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தின் அத்தியாவசிய ஆவணமாக கருதப்படுவது ரேஷன் அட்டையாகும். ஒவ்வொரு பணிக்கும் இந்த ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.

நீங்கள் அரசு வேலை பெற விரும்பினாலோ, ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது வங்கி புத்தகம் ஓபன் செய்ய வேண்டும் என்றாலோ ரேஷன் அட்டையை ஒரு முக்கிய ஆவணமாக நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய ரேஷன் அட்டையை நம்ம எளிதாக எப்படி விண்ணப்பித்து பெறலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

ரேஷன் அட்டை:

ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் பெற்று பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை ஒவ்வொரு மாநில அரசாங்கத்தாலும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ரேஷன் அட்டை பெற அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது உள்ள டிஜிட்டல் மாற்றத்தின் காரணமாக நீங்கள் ரேஷன் அட்டையை ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே எளிதாக விண்ணப்பித்து விடலாம்.

ரேஷன் அட்டை எப்படி வழங்கப்படுகிறது:

ரேஷன் அட்டைகள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதே போல குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து பொருட்கள் கொடுக்கும் அளவுகளும் வேறுபடுகிறது. அதுமட்டுமில்லாமல் வருமானத்தினை பொறுத்து ரேஷன் கார்டின் தன்மை நிறங்களில் அடிப்படையில் வேறுபடுத்தி வழங்கப்படுகிறது.

ரேஷன் அட்டை மூலம் ஏற்படும் மோசடிகள்:

சிலர் வெளிநாடுகளில் இருக்கும் தங்களின் உறவினரின் பெயரை ரேஷன் அட்டைகளில் இணைத்து விட்டு பொருட்களை பெற்று கள்ள சந்தையில் விற்பனை செய்கின்றனர். அது மட்டுமில்லாமல் சிலர் இறந்தவர்களின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்காமல் பொருட்களை வாங்கி மோசடிகளை செய்து செய்கின்றனர்.

இந்த முறைகளை மற்றும் இந்த மோசடிகளை தவிர்க்க தற்போது ஆன்லைன் முறையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் கைரேகைகளை பதிவு செய்து அதன் மூலம் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு முன் கட்டாயம் குடும்பத்தில் உள்ள ஒருவராவது தங்களுடைய கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு ஒரு முறை ரேஷன் கார்டில் உள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை ரேஷன் அலுவலர் மூலம் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கான பொருட்கள் அவர்களால் பெற முடியும். இதன் மூலம் ரேஷன் அட்டைகள் மூலம் நடைபெறும் பெரும் மோசடிகள் தவிர்க்கப்படுகிறது.

ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

ரேஷன் கார்டு விண்ணப்பிக்க உங்களுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.

  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • டிரைவிங் லைசென்ஸ்
  • மின் ரசீது
  • பேங்க் பாஸ்புக்
  • பாஸ்போர்ட் அளவு உள்ள புகைப்படங்கள்

இத்தகைய ஆவணங்களை வைத்து தான் நீங்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ரேஷன் அட்டை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி?

இத்தகைய சிறப்பு வாய்ந்த ரேஷன் அட்டையை நம் ஆன்லைன் மூலமாக எப்படி விண்ணப்பித்து பெறலாம் என்பதை படிப்படியாக கீழே பார்ப்போம்.

  • முதலில் தமிழக அரசின் ரேஷன் கடை இணையதளத்திற்கு https://www.tnpds.gov.in/செல்ல வேண்டும். உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்தபடியாக இணையதளத்தில் ஸ்மார்ட் கார்டு என்பதை செலக்ட் செய்து அப்ளை நியூஸ் ஸ்மார்ட் கார்டு என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக யாரை நீங்கள் குடும்பத் தலைவராக தேர்ந்தெடுக்கிறீர்களோ அவர்களிடம் புகைப்படம் மற்றும் உங்களுடைய முகவரிக்கான சான்றை பதிவேற்ற வேண்டும்.
  • அனைத்து தகவலையும் கொடுத்த பிறகு ஏதாவது தவறு இருக்கிறதா என்பதை நீங்கள் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • எல்லாம் முடிந்த பிறகு சப்மிட் பட்டனை கிளிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
  • இந்த தகவல் எல்லாம் முடிந்த பிறகு உங்களுக்கு ஒரு ரேஷன் கார்டு விண்ணப்பித்ததற்கான ரெபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். இதனை வைத்துக்கொண்டு நீங்கள் உங்களுடைய ரேஷன் கார்டு அப்ளை செய்ததற்கான நிலையை அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் நேரடியாக தாலுகா அலுவலகத்துக்கு சென்றும் இந்த ரேஷன் அட்டையை பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்று நீங்கள் நேரடியாக விண்ணப்பித்தும் கொள்ளலாம். இந்த இரண்டு வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து பெறலாம்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *