தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பாட வாரியான பொதுத்தேர்வு கால அட்டவணை 2022 – முழு விபரம் வெளியீடு!
தமிழகத்தில் 10, 11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் தேதிகளை அரசு தேர்வுகள் இயக்கம் தற்போது பாட வாரியாக வெளியிட்டுள்ளது. கால அட்டவணை குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
கால அட்டவணை:
public-exam-time-table-official-notification-has-been-released
public-exam-time-table-official-notification-has-been-released
தமிழகத்தில் ஆண்டுதோறும் மேல்நிலை வகுப்புகளான 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்து அடுத்த வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை? பள்ளிகள் திறப்பு தேதி வெளியீடு!
இதனால் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளிகளில் முழு நேர வகுப்புகளை நடத்தி விரைந்து பொதுதேர்விற்கான பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களும் பொது தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் இன்று பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியானது. அதில் 12ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் 10ம் வகுப்பிற்கு மே 6 முதல் பொதுத்தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பாட வாரியான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கீழே உள்ள இணைப்பின் வாயிலாக கால அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.