தமிழகத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாளான சதய விழா நடைபெற இருப்பதால் வருகிற 03.11.2022 அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 3 ஆம் தேதி மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாள் அன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 1037வது ஆண்டு சதயவிழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 3 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக 12.11.2022 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , நிறுவனங்களும் வழக்கம் போல வேலை நாளாக இருக்கும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881ன் கீழ் உட்படாது
இதனால், அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் உள்ளூர் விடுமுறை தினத்தின் போது ஏற்கனவே திட்டமிட்ட அரசு தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.