மருத்துவ துறையில் 4,308 காலியிடங்கள் – 2 மாதத்தில் நிரப்ப முடிவு, அமைச்சர் அதிரடி!
தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ துறை:
தமிழகத்தில் அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ துறையில் 4,308 காலியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு கூட்டத்தை தொடந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழகத்தில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து புதிய 5 மருந்து கிடங்குகள் கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் 800 இடங்களில் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ துறையில் மொத்தமாக 4,308 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், அவை 2 மாதங்களில் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.