பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை – உடனே விண்ணப்பியுங்கள்.. மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
இந்தியாவில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சீர்மரபினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் 9,10ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். மேலும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இத்தகைய தகுதி உடையவர்கள் என்ற https://yet.nta.ac.in என்ற ஆக. 10ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உதவித்தொகை பெறுவதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். இத்தேர்வின் அடிப்படையில் கல்வித் தொகை பெற தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெறும்.