உலகின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி செய்யும் காற்றாலையை சீனா தொடங்கியுள்ளது. இந்த காற்றாலையானது கடந்த ஜூலை 19 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. சீனாவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள கடலோர பகுதியில் இந்த பெரிய காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 152 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள MySE-16-260 என்ற காற்றலை 16 மெகாவாட் திறனை கொண்டுள்ளது. இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளம் கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஒவ்வொரு பிளேடும் 123 மீட்டர்கள் மற்றும் 54 டன் எடை கொண்டதாக உள்ளது.
இதையடுத்து, இந்த காற்றலை மூலம் ஒரு வருடத்திற்கு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட 36,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று த்ரீ கோர்ஜஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்த பெரிய காற்றலை அமைக்கப்பட்டதன் மூலம் சீன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.