தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்..! காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வானது செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதேபோல், 2023 -24 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வும் செப்டம்பர் மாதம் 2 வது வாரங்களில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டு தேர்வானது 6 ஆம்வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் தொடங்கப்பட்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Good news for students of Tamil Nadu So many days off for the quarter exam The new notification issued by the Department of School Education read it now

இந்நிலையில், இந்த காலாண்டு தேர்வானது 27 ஆம் தேதி நிறைவடைய உள்ளதால் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலும் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *