
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா என்ற கொடிய வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் இந்த வைரஸானது உலகம் முழுவதும் பரவ தொடங்கி பல் ஆயிரம் கணக்கான மக்களை பலி வாங்கியது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்தது. அதன்பின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகத்தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து இருக்கின்றனர்.
இந்நிலையில், சமீபகாலமாக கொரோனா தொற்று அந்த அளவிற்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தற்பொழுது கொரோனா வைரஸ் உருமாறி இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, உலக மக்களை பாதுகாப்புடன் இருக்கும் படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிஸ் வகை கொண்ட இந்த தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, சோர்வு, தும்மல், தொண்டைப்புண் முதலான அறிகுறிகள் தென்படும் எனவும், 75 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களையே இந்த எரிஸ் தொற்று அதிக அளவில் பாதிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்