தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள் தற்பொழுது தனியார் பள்ளிகளை போலவே தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை காக்கவும் நல்லொழுக்கத்தை வளர்ப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் செப்.1 முதல் முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.