இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக ஓடிடி தங்கள் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்திற்கு பின்பு ஓடிடி தளங்கள் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் ஓடிடி தளங்கள் வந்ததில் இருந்து பெரும்பாலானோர் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டனர் என்றே சொல்லலாம். இந்த OTT தளங்களை அணுக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி அவற்றில் சப்ஸ்கிரைப் செய்தால் மட்டுமே நாம் விரும்பும் படத்தை பார்க்க முடியும்.
அந்த வகையில், இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளங்களாக ஜியோ சினிமா, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார்(disney + Hotstar), ஜீ5 ஆகியவை உள்ளது. இவை ஒன்றோடொன்று போட்டி போட்டு கொண்டு பயனாளர்களை கவரும் வகையில் சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பீரிமியம் பயனாளர்கள் 4 சாதனங்களில் இருந்து மட்டுமே உள்நுழைய முடியும் என்று தெரிவித்துள்ளது. கடவுசொல் பகிர்வில் உள்ள சிக்கலி தீர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக 10 சாதனங்களில் ஹாட்ஸ்டார் ப்ரைம் கணக்கை லாகின் செய்த நிலையில், இனி 4 சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.