தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது(TNPSC) தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இந்நிலையில், கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
அதன்படி, கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், குரூப் 1 முதல்நிலை தேர்வில் சுமார் 2 ஆயிரத்து 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1,333 ஆண்களும், 780 பெண்களும் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.