பின்னடைவு காலிப் பணியிடங்கள்: மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு! தமிழக அரசின் புதிய உத்தரவு!
சென்னை, ஜூலை 26: மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் இரா.ஆனந்தகுமார் வெளியிட்ட உத்தரவு: மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. இதற்காக சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உரிய பரிந்துரைகளை, தமிழக அரசுக்கு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அளித்திருந்தார். அதில், அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அலுவலகங்களில்...