“திரும்ப வந்துட்டியா நீ” மீண்டும் பரவ தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸ்..! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!!
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா என்ற கொடிய வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் இந்த வைரஸானது உலகம் முழுவதும் பரவ தொடங்கி பல் ஆயிரம் கணக்கான மக்களை பலி வாங்கியது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்தது. அதன்பின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகத்தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து இருக்கின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக கொரோனா தொற்று அந்த அளவிற்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தற்பொழுது கொரோனா வைரஸ் உருமாறி இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது....
