“புதிதாக விண்ணப்பிப்போருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை” – பேரவையில் உதயநிதி தகவல்
சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், தனது தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதியளிக்கப்படவில்லை என்ற விவரங்களை தெரிவித்தனர். மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா? என வினவினார். தொடர்ந்து, கொமதேக உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனும், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுமா என கேட்டார்.கேள்விகளுக்கு பதிலளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “திண்டுக்கல்...