Author: Admin

0

வார இறுதி நாட்கள்… தமிழகத்தில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்..! எந்தெந்த ரூட்டில் தெரியுமா?

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய சிரமத்தை போக்க போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல் வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து நெரிசலை தடுக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு  400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் படிப்பு மற்றும் வேலை போன்ற வெவ்வேறு காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கி வருகின்றனர். இவர்கள் வார இறுதி நாட்களில் தான் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதன் காரணமாகத்தான் வார இறுதி நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்க...

0

இனிமே இந்த அதிகாரிகளுக்கு “டேப்லட்” வழங்கப்படும்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் பயிலும் அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் அனைத்தும் மாறி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் பயன்பாட்டிற்கு “டேப்லட்” வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல் மூலம் பள்ளி சார்ந்த நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகள் உடனே தெரிவிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டுதான் பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

the-lowest-price-of-tomatoes-in-one-day-is-that-much-per-kilo-read-now 0

ஒரே நாளில் சரசரவென குறைந்த தக்காளியின் விலை..! ஒரு கிலோ இவ்வளவுதானா… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கு விற்கப்பட்ட விலையில் வரத்து குறைவின் காரணமாக தக்காளியின் விலை மேலும் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் தக்காளியின் இந்த விலை ஏற்றம் காரணமாக இல்லத்தரசிகள் பலரும் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து, தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு...

chennai-iit-new-information-all-students-read-immediately-this-news-for-very-useful 0

சென்னை IIT புதிய தகவல்! மாணவர்கள் அனைவரும் உடனே படிங்க!

பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பம் சென்னை ஐஐடி தகவல் சென்னை, ஆக. 3: சென்னை ஐஐடி-இல் இணையவழியில் வழங்கப்படும் ‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்’ என்ற 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ஆக.27-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கவும், உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ‘பி.எஸ்.- எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ எனும் 4 ஆண்டு படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான பாடத் திட்டம் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதப் பாடங்களைப் படித்தவர்களாக இருக்க வேண்டும். இந்தப்...

0

மாணவர்களே இனி மறந்தும் கூட இந்த தப்ப பண்ணிடாதீங்க… வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் முன்னதாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது 500 மதிப்பெண்களுக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 1200 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களாகவே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் என மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும் 11 ஆம் வகுப்புக்கும் 600 மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக...

rs1000-entitlement-tamil-nadu-chief-ministers-important-advice-today-read-now 0

ரூ.1000 உரிமைத்தொகை… இன்று தமிழக முதலைமைச்சர் முக்கிய ஆலோசனை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்க்கான படிவங்கள் வழங்கபட்டு வருகின்றனர். இதன் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  திட்டத்திற்கு சிறப்பு முகாமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.63 லட்சம் பேர்  விண்ணபித்துள்ளதாகவும்  இதுவரையில் சுமார் 79.66  லட்சம் வரை   விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் உரிமை திட்டம் ஆனது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மறுமுறை விண்ணப்பம்  பெறப்படும் என்றும் வரும் 5 ஆம் தேதி  முதல் 16 ஆம் தேதி வரை  இரண்டாம் கட்ட முகாம் நடைபெறும்...

0

சுதந்திர தின விழா : சென்னையில் இன்று முதல் ஒத்திகை நிழ்ச்சி ஆரம்பம்!

வருகிற ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல் அமைச்சர் மு .க.ஸ்டாலின்  சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய  கொடி ஏற்ற உள்ளார். இந்நிலையில், சுதந்திர விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஒத்திகை  நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது. இதனையொட்டி இன்று  சென்னையில் காமராஜர் சாலையில் சுதந்திர தின விழாவின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி சிற்ப்பாக  நடைபெற்று வருகின்றன.  இதற்காக ஏழு  படை பிரிவு வீரர் வீராங்கனைகள் மற்றும் காவல் படை ஆகியோர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஒத்திகையானது வருகிற 10/08/2023  மற்றும் 13/08/2023  அன்று நடைபெற  உள்ளது.  இந்நிகழ்ச்சியானது ராஜாஜி சாலையில் காலை  6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

if-the-water-level-of-mettur-dam-has-decreased-so-much-what-is-the-reason-read-it-now 0

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இவ்வளவு குறைஞ்சிடிச்சா… என்ன காரணம்?

சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேட்டூர் அணையைப்பற்றி  நாம் அறிந்திருக்கிறோம் ….! ஏனென்றால்  இந்த அணையின் மூலம்  தமிழ்நாட்டில்  உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம்  போன்ற 12 மாவட்டங்கள்  பாசன வசதியை பெறுகின்றன. இந்நிலையில், இந்த மேட்டூர் அணையில்யிருந்து குருவை பாசனத்திற்காக   ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர்   திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் காவிரியிலிருந்து கடந்த 12 ஆம் தேதி  குருவை சாகுபடி செய்ய சுமார் 12 ஆயிரம் கண அடி வீதம் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தினால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்  திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின்...

allow-these-four-days-to-go-to-chaturagiri-hill-devotees-this-announcement-is-for-you-read-now 0

சதுரகிரி மலைக்கு செல்ல இந்த நான்கு நாட்களுக்கு அனுமதி..! பக்தர்களே இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம்  கோவில் ஆனது விறுதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. சதுரகிரி கோவிலில்  ஆடி அமாவாசை  முன்னிட்டு   6 நாட்களுக்கு  பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை  6 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர,சந்தன மகாலிங்கம்  கோவில்   திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோவிலில் இருக்கும் நீரோடை பகுதிகலில் பக்கதர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆடி அம்மாவாசை முன்னிட்டு  வழக்கம் போல் வரும்...

0

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் தேதியில் திடீர் மாற்றம்..! என்ன காரணம்?

நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி இருக்கும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் நவராத்திரி என்பதால் அன்றைய தேதியில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காரணத்தை கருத்தில் கொண்டு தேதியை மாற்ற கோரி பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதன் பெயரில் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு போட்டியை மாற்ற கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையே...