இன்னும் சில மணி நேரத்தில் இந்தியா படைக்கபோகும் புதிய சரித்திரம்..! முழு விவரங்களுடன்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பிறகு ஒவ்வொரு படியாக உயர்த்தப்பட்டு பூமியின் சுற்றுவட்ட பாதையை முடித்து விட்டு நிலவின் சுற்றுவட்ட பாதையை சுற்ற தொடங்கியது. அதன்பின், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேன்டர் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த விக்ரம் லேண்டரானது 23 ஆம் தேதி(இன்று) மாலை மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி விட்டால் இந்தியா சரித்திரம் படைத்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை பொதுமக்கள் காணும் வகையில்...