november-3-holiday-for-schools-in-tamil-nadu
தமிழகத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாளான சதய விழா நடைபெற இருப்பதால் வருகிற 03.11.2022 அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 3 ஆம் தேதி மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாள் அன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 1037வது ஆண்டு சதயவிழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை...