அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு – குறைந்தபட்ச கல்வி தகுதியே! விண்ணப்பிக்க
Chennai High Court OA Job: வணக்கம் நண்பர்களே! இன்று நாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாக்கியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, சம்பள விவரம், அப்ளை செய்யும் முறை மற்றும் நோட்டிபிகேஷன் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் அனைத்தும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளவும்.
பணி விவரங்கள்
தமிழகத்தில் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் 01 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பணி செய்யும் வேலை என்பதால் விண்ணப்பதாரர்கள் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு குறைந்த கல்வி தகுதி உடையவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
வயது
18 வயது முதல் 34 வயது வரை உள்ள அனைவரும் சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
இந்த அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 15 ஆயிரத்து 700 சம்பளமாக கிடைக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
சென்னை உயர்நீதிமன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
எந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உங்களுடைய புகைப்படம் கல்வித் தகுதி சான்றிதழ் சாதி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் சுய கையொப்பமிட்டு கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப தொடக்க தேதி: 25 செப்டம்பர் 2024
விண்ணப்ப கடைசி தேதி: 25 அக்டோபர் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply