சென்னை: நாய்களை வளர்க்க பிரியப்படுபவர்கள் முறையான அனுமதியை பெற வேண்டும், இல்லாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள். சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவ அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் இன்னமும் மீளவில்லை.. தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கியது.. இப்போது, சிறுமிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய போகிறார்கள்..
சிறுவர்கள்: இதேபோல, மேலும், 2 இடங்களிலும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர். பரங்கிமலையில் 11 வயது அஸ்வந்த் என்ற சிறுவனை விரட்டி விரட்டி நாய் கடித்துள்ளது.. அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த நாயை விரட்டி விட்டனர்.
இப்போது காயமடைந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.. சிறுவனை நாய் கடித்த விவகாரம் குறித்து பரங்கிமலை போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது.. நாய்கடி விவகாரத்தை முற்றிலும் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
என்ன காரணம்: காரணம், சென்னை மாநகரில் வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் தற்போது அதனை தெரு நாய்களை போல வெளியில் சுற்றவிட்டு வருகிறார்களாம்.. இந்த நாய்களால்தான், பொதுமக்களுக்கு ஆபத்து எழுந்துள்ளதாக சொல்கிறார்கள்..
இதையடுத்து, நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதுடன், இதற்கான அதிரடி நடவடிக்கைகளையும் கையிலெடுத்து வருகிறார்கள். அதன்படி, வளர்ப்பு நாய்களை முறையாக பராமரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் வலியுறுத்தி வருகிறார்கள்.
சென்னை : அதேபோல, சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள், மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டுமாம்.. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்திருக்கிறார்களாம்.
எனவே, இனிமேல் நாய் வளர்க்க பிரியப்படுகிறவர்கள் உரிமை பெற வேண்டும், இல்லாவிட்டால், ரூ.1000 அபராதம் விதிக்கவும் தயாராகி வருகிறார்களாம்.. உரிமம் பெறாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்திலும் இடம் உள்ளதையும், மாநகராட்சி அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்..
சென்னை மாநகராட்சியின் இந்த அடுத்தடுத்த அதிரடிகள், நாய் வளர்ப்பவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.. அதேசமயம், நாய்களால் உலகமறியா குழந்தைகள் அடுத்தடுத்து பாதிக்கப்படுவதால், கதிகலங்கியும் போயிருக்கிறார்கள். 1000 ரூபாய் அபராதம் விதிப்பதாக அறிவித்துள்ளதும், நாய் கடித்தால் அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும், பொதுமக்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.