coa exam important updates 2022

coa exam important updates 2022

coa exam important updates 2022

🔥அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் – தலைமை செயலாளர் உத்தரவு !*

இனி வரும் அரசு பணிகளுக்கு சேர விரும்புவோர் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுவதாக தற்போது தமிழக அரசின் தலைமை செயலரிடம் இருந்து அனைத்து துறை செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது.

கணிணிமயமாகும் அரசுத் துறைகள்:

தமிழக அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் அரசு பணிகளுக்கு நியமனம் பெறுவோர் அனைவரும் கட்டாயமாக கணினியினை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பினை அவசியமாக கற்க வேண்டும் என தமிழக அரசிற்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரைத்தது.

இதனை ஏற்று தற்போது அனைத்து அரசு பணிகளிலும் சேருவதற்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபீஸ் ஆட்டோமேசன் படிப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு தமிழ், ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை, தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு நிலையம், அரசு, அரசு உதவி பெரும், தனியார் பாலிடெக்னிக்களில் 120 மணி நேர பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்நிலை பணிகள் மட்டுமில்லாது கீழ்நிலை பணிகளுக்கும் இந்த கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பதவிகளுக்கு ஆட்டோமேசன் படிப்பு கட்டாயம்.?

டாக்டர்கள், பொறியாளர்கள், வனத்துறை உள்ளிட்ட அதிகாரி பதவிகள், உதவியாளர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் டிரைவர் உள்ளிட்ட கீழ்நிலைப் பதவிகளுக்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *