கணினி இயக்கத் தெரிந்தவர்களுக்கு சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க

கணினி இயக்கத் தெரிந்தவர்களுக்கு சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க

Community Organizer Job: வணக்கம் நண்பர்களே! திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அழகு அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விவரங்கள்

திருநெல்வேலி மாவட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 01 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி

சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் இளநிலை படிப்பு படித்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கணினி இயக்க அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

வயது தகுதி

இந்த சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது சார்ந்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்துக் கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை

திருநெல்வேலி மாவட்ட இயக்க அலுவலகத்தில் உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு வைத்து அதன் அடிப்படையில் இந்த பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட இணையதள பக்கத்தில் https://tirunelveli.nic.in/ சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் நினைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

முகவரி:

மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம்.

விண்ணப்ப தொடக்க தேதி: 25 செப்டம்பர் 2024

 

விண்ணப்ப கடைசி தேதி: 10 அக்டோபர் 2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *