
கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் அடுத்தடுது பரவி உலகையே ஆட்டி படைத்தது. இதில் லட்சகணக்கான பேர் பலியானது மட்டுமல்லாமல் கோடிகணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்பொழுது மீண்டும் கொரோன பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று நிலவரபடி, 1,533 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுடெல்லியில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு 77 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 25 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 351 பேர் தொற்றில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். இந்தியாவில் கடந்த 2 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில் நேற்று ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.