- CRPF தலைமை கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2021 – 38 காலிப்பணியிடங்கள் || 12வது தேர்ச்சி!!
மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Head Constable (Ministerial) பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த CRPF பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தேவையான தகுதிகளை ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CRPF |
பணியின் பெயர் | Head Constable (Ministerial) |
பணியிடங்கள் | 38 |
நேர்காணல் தேதி | 15.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
CRPF வேலைவாய்ப்பு 2021 :
CRPF அறிவிப்பில் Head Constable (Ministerial) பணிகளுக்கு என மொத்தமாக 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Head Constable வயது வரம்பு :
- பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
CRPF கல்வித்தகுதி :
- மத்திய அல்லது மாநில அரசு கல்வித்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் ஆங்கில தட்டச்சில் 35 words per minute என்ற வேகத்திலும், ஹிந்தி தட்டச்சில் 30 words per minute என்ற வேகத்திலும் தட்டச்சு திறன் கொண்டிருக்க வேண்டும்.
CRPF தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் Written Exam மற்றும் Physical Standard Test ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி படைத்தவர்கள் வரும் 15.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.