மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது.
சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் கடந்த மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கொடுத்து இருந்தது.இந்த நிலையில், பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கிய நிலையில், கடலோர ஒழுங்கு முறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் பணிகளை இனி தமிழக அரசு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.