பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படும் (DRDO) Defence Geo informatics Research Establishment (DGRE) இருந்து பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து Diploma Apprentice, ITI Apprentice and Graduate Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | DRDO |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 48 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
DRDO நிறுவனத்தில் Diploma Apprentice, ITI Apprentice and Graduate Apprentice பணிகளுக்கு என 48 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
DRDO DGRE கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Engineering பாடங்களில் Graduate/ Diploma/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கடந்த 2018, 2019 & 2020 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
DRDO DGRE ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட முறையில் உதவித்தொகை வழங்கப்படும்.
- Graduate Apprentice ரூ.9000/-
- Diploma Apprentice ரூ.8000/-
- ITI Apprentice ரூ.7000/-
DGRE தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் தங்களின் தேர்வு மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.