தமிழகத்தில் முட்டை விலை தொடர்ந்து உயரும்..! என்ன காரணம்?

Egg prices will continue to rise in Tamil Nadu what is the reason read more

முட்டை என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது நாமக்கல் மாவட்டம் தான். ஏனெனில், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிக அளவு முட்டையை உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்துதான் முட்டை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தினசரி இங்கு சுமார் 3.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், கேரளா போன்ற பல்வேறு மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், NECC எனப்படும் National Egg Coordination Committee தான் தினந்தோறும் முட்டைகளின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில்தான் வியாபாரிகள் முட்டையை விற்பனை செய்து வந்தனர். ஆனால், ஒரு சில வியாபாரிகள் இதனை பின்பற்றாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்று விதிமுறைகளை மீறும் வியாபாரிகள் மீது புகார் தெரிவிக்கலாம் எனவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிப்பதால் தமிழகத்தில் முட்டை விலை உயரும் என்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *