ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை திட்டம் – அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலையை விரைந்து உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இலவச வேட்டி, சேலை:
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது இலவசமாக வேட்டி மற்றும் சேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்து அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் இலவச வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் மாவட்ட வரியாக தேவைப்படும் வேட்டி, சேலைகளின் எண்ணிக்கையை கைத்தறி ஆணையருக்கு தெரிவிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கைத்தறி மற்றும் கோஆப்டெக்ஸ் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டம் வாயிலாக நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேட்டி, சேலை உற்பத்தி தொடர்பான பணிகளை விரைந்து தொடங்கி தரமான சேலைகள் மற்றும் வேட்டிகளை உற்பத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.