சமூக ஊடக செயலிகளில் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ் அப் செயலி உள்ளது. உலகம் முழுவதும் கோடிகணக்கான மக்கள் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி அவ்வபோது தனது பயனாளர்களின் வசதிக்கேற்ப புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு வாட்ஸ் அப் செயலியில் Multiple Account யை லாகின் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு வாட்ஸ் அப் செயலியில் ஒரே ஒரு அக்கவுண்ட் மட்டுமே லாகின் செய்ய முடியும். ஆனால், தற்பொழுது வெளியான புதிய அப்டேட்டில் க்யூஆர் கோடு மூலமாக மற்றொரு வாட்ஸ் அப் அக்கவுண்டையும் லாகின் செய்து கொள்ள முடியும்.
மேலும், இந்த புதிய அம்சத்தில் மற்றொரு அக்கவுண்டை தேவையில்லாத போது லாக் அவுட் செய்யும்படியான வசதியும் உள்ளது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்தேட்டானது பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.