
from-now-on-our-game-is-going-to-be-on-a-different-level-leo-song-which-became-a-youtube-trend-in-one-day-read-immediately
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன நடிப்பால் கட்டி போட்டு வைத்துள்ளார். இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் விஜய் நடித்த படங்கள் பலவும் ஹிட் அடித்துள்ளது.
அந்த வகையில், தற்பொழுது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளான நேற்று ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” என்ற பாடலின் முழு லிரிக்கல் வீடியோ வெளியானது. இந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த பாடலை தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்த பாடல் ஒரே நாளில் யூடியூப் டிரென்டிங்கில் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது.