![15.10.2022 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - [Press Release No : 1777 ] From the Director, Employment and Training Department, Chennai](https://startamilexam.com/wp-content/uploads/2022/10/cssc-1-248x300.png)
15.10.2022 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – [Press Release No : 1777 ] From the Director, Employment and Training Department, Chennai
செய்தி வெளியீடு எண்: 1777
நாள்:11.10.2022
சென்னை மாவட்ட நிர்வாகம் மாவட் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் (THE NEW COLLEGE) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அவர்களின் அறிவிப்பு சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15:10.2022 அன்று இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் (THE NEW COLLEGE) நடைபெற உள்ளது.
இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்களால் 40.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இம்முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ. டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் இம்முகாமில் சிறப்பு நேர்வாக உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார்துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு கல்வித்தகுதிகளை உடைய பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள வரும் உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து நபர்களும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம். கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் (Bio-Data) நேரில் வருகைப்புரிந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ.வீர ராகவ ராவ், இஆப. அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.