நாடு முழுவதும் மாதத்தின் முதல் நாள் சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வருகின்றனர். இந்த கேஸ் சிலிண்டரின் விலையானது கச்சா எண்ணெய் விலை அவற்றின் ஏற்றுமதி மற்றும் அவற்றின் இறக்குமதி ஆகியவற்றின் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர்களில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு என இருவிலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் இன்று சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலைரூ. 92.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதால் 1,945 ரூபாயில் இருந்து 1,852.50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை எந்தவொரு மாற்றமின்றி ரூ.1,118 உள்ளது.