சுதந்திர தின நாளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள் நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டார் அதில் ,” தமிழ்நாட்டில் தென்னை விவசாய்கள் சாகுபடி செய்யும் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கையிட்டார்.
மேலும், தென்னை விவசாயம் செய்யுபர்களுக்கு இந்த கோரிக்கை மிகவும் நியாயமானதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே தென்னை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுபோன்று வலியுறுத்தி வரும் விவசாய்களின் குரல் தான் இப்பொழுது கிராமசபை தீர்மானமாக எதிரொலித்திருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். நம் தமிழ்நாட்டில் மொத்தம் 10.98 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஓர் ஆண்டுக்கு 500 கோடிக்கும் கூடுதலான தேங்காய் விளைகின்றன. தமிழ்நாட்டிற்கு கேரளா மாநிலங்களில் இருந்து தேங்காய்கள் வருவதால் அதற்கு போதிய விலை கிடைப்பதில்லை.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசுடன் மத்திய அரசும் இணைந்து, தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பா. ம.க. நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.