இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்களுடைய எண்ணங்களை EMOJIகளாக அனுப்புகிறார்கள். ஒவ்வொரு EMOJIக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. இதை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்! இதில் அனைவரும் விரும்பும் முக்கியமான EMOJI என்றால் HEART EMOJI தான். இந்த ஹார்ட் EMOJIகளை பயன்டுத்த கூடாது என்று அறிவித்துள்ளது அரசு!
தற்போது, வினோத அறிவிப்பு ஒன்றை குவைத் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தான் இனையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த அறிவிப்பு என்ன என்றால், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு “HEART EMOJI”களை அனுப்பினால் சிறைத் தண்டனை அளிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அபராதமும் விதிக்கப்படும். அதிலும், முதல் முறை தவறு செய்தால் 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் உண்டு. மீண்டும் தவறு செய்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் கூடுதல் அபராதமும் விதிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.