தமிழக மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

தமிழகத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமானது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் கற்றல் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் இந்த திட்டத்தினை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பிறகு  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும்   1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மானவியர்களுக்கு  காலை சிற்றுண்டி  திட்டத்தின் கீழ் உணவு வழங்கபட்டது. இதில் லட்ச கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றன.

happy news Breakfast program for students of Tamil Nadu New information released recently watch now

இதனையடுத்து,  பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில், முதல் கட்டமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் திருக்குவளை கிராமத்தில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கென கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும்,  அதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கூடிய விரைவில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *