தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று களைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த மகளிர் உரிமை திட்டம் ஆனது, “பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்” வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான விண்ணபங்கள் வழங்கும் முதற்கட்டமாக பணியானது 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்றது. இந்த விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில், இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும், இந்த இரண்டாம் கட்ட முகாமில் களைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணபங்களை பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 19 மற்றும் 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்தபின் தவறுகள் இருந்தால் அதனை சரி பார்ப்பதற்கும் வீட்டிற்கு கள ஆய்வு அதிகாரிகள் வருவார்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.