தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை என அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து படிப்படியாக தற்போது மீண்டு வந்தனர். அரசும் கொரோனா பாதிப்பு குறைவதால் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் அதற்குள் கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனாவின் உருமாறிய வைரஸான ஓமிக்ரான் தொற்று பரவ தொடங்கியது. அது சாதாரண வைரஸை விட அதிகம் வீரியத்துடன் இருப்பதால் சில மாதங்களில் உலக நாடுகளை அதிகம் பாதித்தது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி?
holiday-announcement-for-10-11-12th-class-students-in-tamil-nadu-till-jan-31
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை எட்டி உள்ளது. அதனால் அரசு கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன் படி, ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி இருக்கிறது. பொது மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் அதற்காக தடுப்பூசி முகாம்களை சனிக்கிழமைகளில் நடத்தி வருகிறது.
அதனை தொடர்ந்து பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதே போல கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு ஜன. 31 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜனவரி 19ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.