சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேட்டூர் அணையைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம் ….!
ஏனென்றால் இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற 12 மாவட்டங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
இந்நிலையில், இந்த மேட்டூர் அணையில்யிருந்து குருவை பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் காவிரியிலிருந்து கடந்த 12 ஆம் தேதி குருவை சாகுபடி செய்ய சுமார் 12 ஆயிரம் கண அடி வீதம் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தினால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 131 கன அடியாக உள்ளது.