இன்றைய காலகட்டத்தில் அருகில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு வாகனத்தைதான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு, வாகனங்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வாகனங்கள் இல்லாத பலரும் வாடகை ஆட்டோ அல்லது கால் டாக்கியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்று வாடகை ஆட்டோ அல்லது கால் டாக்சியை புக் செய்யும்பொழுது அதிக கட்டணத்தை வசூலிப்பதுடன் சரியான நேரத்திற்கும் வருவதில்லை என்று பலரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலி மூலமாக அதிகமாக ஆட்டோ மற்றும் கார் இயங்கி வருகிறது.
இதுபோன்ற தனியார் செயலிகளின் மூலம் பணிபுரியும் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு கமிஷன் சரியாக கொடுப்பதில்லை என்றும் ஒரு நாளைக்கு கட்டாயம் இத்தனை சவாரிகளை ஏற்ற வேண்டும் எனவும் கட்டளையிடுவதாக தெரிவித்துள்ளனர். டிரைவர்களின் இத்தகைய பிரச்சனையை சரிசெய்ய தமிழக அரசு புதிய செயலியை உருவாக்க இருப்பதாக முதல்வர் உறுதியளித்து உள்ளதாக ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.