வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் வாகனங்கள், பேருந்துகள் அல்லது ரயில் சேவையை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஏனென்றால், நடந்து செல்வதை விட ரயில் மற்றும் பேருந்து சேவைகளை நாம் மேற்கொள்ளும்போது நேரம் குறைவதுடன் மற்ற வேலைகளையும் எளிதில் முடித்து விட முடிகிறது. தமிழகத்தில், தற்பொழுது ரயில் சேவையை அதிகரிக்கும் பணியில் மெட்ரோ இறங்கியுள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணியானது தற்பொழுது தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியினை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்று கட்டுமான பணியின்போது தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் அந்த தொழிலாளர்களின் சொந்த ஊருக்கே உடலைக் கொண்டு செல்வதற்கு தொழிலாளர் நலத்துறையின் மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் அவர்களின் உடல், உடல் கூராய்வு செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து தமிழக அரசின் அமரர் ஊர்தி மூலமாகவே சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும் எனவும் வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் உடலானது விமானம் மூலமாக சொந்த ஊர்களுக்கு எடுத்த செல்லப்படும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் மூலமாக ரூ.1 லட்சம் நிதியுதவி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.