தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தி வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணையமானது பல்வேறு துறைகளில் இருக்கும் பதவிக்கு ஏற்ப பல்வேறு குரூப் களாக பிரித்து அதன்படி தேர்வை நடத்தி வருகிறது.

அந்த வகையில், TNPSC ஆனது தடய அறிவியல் துணைப் பணியில் ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணிக்கான 31 காலியிடங்களுக்கான அர்விப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்த பதவிக்கான தேர்வு கடந்த ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைகுறிப்புகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடை குறிப்பில் ஏதேனும் தவறோ அல்லது சந்தேகம் இருப்பின் அதனை 07.08.2023 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மீன்வள ஆய்வாளர் பணிக்கான 64 காலியிடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில் தற்பொழுது இறுதி முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.இந்த முடிவுகளை தேர்வர்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.