வருகிற ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல் அமைச்சர் மு .க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்ற உள்ளார். இந்நிலையில், சுதந்திர விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி இன்று சென்னையில் காமராஜர் சாலையில் சுதந்திர தின விழாவின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி சிற்ப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏழு படை பிரிவு வீரர் வீராங்கனைகள் மற்றும் காவல் படை ஆகியோர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஒத்திகையானது வருகிற 10/08/2023 மற்றும் 13/08/2023 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது ராஜாஜி சாலையில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.